இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர்; மும்பையில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு
15 மாசி 2026 ஞாயிறு 10:41 | பார்வைகள் : 1961
இந்தியாவுக்கு நாளை பிப்ரவரி 16ம் தேதி வருகை தரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்துகிறார். அப்போது கூடுதலாக ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
இந்தியா ஏ.ஐ., இம்பாக்ட் 2026 மாநாடு, வரும் 16 முதல் 20 வரை டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில், 19ல் பிரதமர் மோடி முக்கிய அமர்வில் உரையாற்ற உள்ளார். திறன் மேம்பாடு, சமூக உள்ளடக்கம், ஏ.ஐ., பாதுகாப்பு, அறிவியல் ஆய்வு உள்ளிட்ட ஏழு துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்கிறார். இதனால் அவர் நாளை இந்தியா வருகிறார். அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் உடன் வருகிறார். இவர்கள் பிப்ரவரி 19ம் தேதி இந்தியாவில் தங்குவார்கள்.
நாளை மும்பையில் பிரதமர் மோடியை இமானுவேல் மேக்ரான் சந்தித்து பேச்சு நடத்துகிறார். அப்போது கூடுதலாக ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்தியா- பிரான்ஸ் இடையே இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. பின்னர் ஏஐ உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டில்லிக்கு இமானுவேல் மேக்ரான் செல்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire