பல ஆண்டுகளாக சேமித்துவைத்த தங்கத்தை தவறுதலாக குப்பையில் வீசிய நபர்
17 மாசி 2026 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 2024
இத்தாலியில், பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேமித்துவைத்த தங்கத்தை ஒருவர் தவறுதலாக குப்பியில் வீசியுள்ளார் .
இத்தாலியிலுள்ள Puglia என்னுமிடத்தில் வாழும் 57 வயது நபர் ஒருவர், பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு 20 தங்கக்கட்டிகளை சேமித்துவைத்துள்ளார்.
அதன் மதிப்பு 120,000 யூரோக்கள் ஆகும். இலங்கை மதிப்பில் அது 4,40,25,600.00 ரூபாய்.
டின் ஒன்றிற்குள் அந்த தங்கக்கட்டிகளை அவர் மறைத்துவைத்திருந்த நிலையில், வீட்டை சுத்தம் செய்யும்போது தவறுதலாக அதை குப்பை கவரில் போட்டுள்ளார்.
பின்னர் தன் தவறை உணர்ந்த அவர் பொலிசில் புகார் செய்ய, CCTV கமெரா காட்சிகளை ஆய்வு செய்த அவர்கள், அந்த குப்பைகளை கொண்டு சென்ற வண்டி எங்கு சென்றது என்று கண்டுபிடித்து, குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் தேடியுள்ளார்கள்.
அதிர்ஷ்டவசமாக அந்த டின் கிடைக்க, அதை சோதித்த அவர்கள், அதற்குள் தங்கக்கட்டிகள் பத்திரமாக இருப்பதைக் கண்டுள்ளார்கள்.
தங்கக்கட்டிகள், அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குப்பைக்குச் சென்ற தங்கம் கிடைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார்கள் உள்ளூர் மக்களும் சமூக ஊடகம் வாயிலாக இந்த செய்தி குறித்து தெரிந்துகொண்டவர்களும்!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire