ரஜினியின் கடைசிப்படம் இதுவா?
17 மாசி 2026 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 2324
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கமலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். 46 வருடங்களுக்குப் பின் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதால் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது கடைசிப்படத்தை முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி தயாரிக்கப் போகிறாராம்.. அதேநேரம் அது கமலுடன் நடிக்கும் படத்திற்கு அடுத்த படமா இல்லை வேறுபடமா என்பது மட்டும் தெரியாமல் இருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே இதுதன் ரஜினியின் கடைசிப் படம் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவே இந்த செய்தி உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire