ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு; திமுக, அதிமுகவுக்கு நெருக்கடி
18 மாசி 2026 புதன் 13:00 | பார்வைகள் : 1989
தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கூட்டணியில் சேருவதற்கும், இருப்பதற்கும் நெருக்கடி கொடுக்கும் அரசியல் கட்சிகளுக்கு எம்.பி., பதவியிடங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டிய நெருக்கடி, திமுக மற்றும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதனால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த சூழலில், தமிழகத்தை சேர்ந்த திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பித்துரை, தமாகா.,வின் ஜிகே வாசன் ஆகியோரது ராஜ்யசபா எம்பி பதவி வரும் ஏப்ரல் 2ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் 10 மாநிலங்களில், 37 ராஜ்யசபா எம்.பி., பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழக சட்டசபை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் 6 எம்.பி., பதவியிடங்களும் அடங்கும். இந்த தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
* பிப்ரவரி 26ம் தேதி- வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
* மார்ச் 5ம் தேதி- வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
* மார்ச் 6ம் தேதி- வேட்புமனுக்கள் பரிசீலனை
* மார்ச் 9ம் தேதி- மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்.
* மார்ச் 16ம் தேதி- காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு
* மார்ச் 16ம் தேதி- மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.
தற்போதைய எம்எல்ஏக்கள் அடிப்படையில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுக கூட்டணிக்கு 2 எம்பிக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தி வரும் தேமுதிகவும் இந்த தேர்தலிலேயே ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்க்கிறது. அன்புமணி தரப்பும் அதே கோரிக்கையை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் சிலர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். அவற்றில். ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற நெருக்கடியும் சேர்ந்தே இருக்கிறது.
சட்டசபை தேர்தல் கூட்டணிகள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படாத நிலையில், திமுக மற்றும் அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக இந்த ராஜ்யசபா தேர்தல் அமைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire