Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது; பிரேமலதா

ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது; பிரேமலதா

18 மாசி 2026 புதன் 12:05 | பார்வைகள் : 1918


கூட்டணி குறித்த கேள்விக்கு, பி கூல், நோ டென்ஷன் (Be Cool, No Tension) உரிய நேரத்தில் அறிவிப்போம். ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பிரேமலதா கறியதாவது:

தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கிறது. திமுக பட்ஜெட்டில் அறிவித்த எல்லா அறிவிப்புகளும் உடனடியாக செயல்படுத்த முடியுமா? அல்லது தேர்தல் முடிந்து வரும் ஆட்சியில் செயல்பாட்டு கொண்டு வர முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்திற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிட்டு அதனை செயல்படுத்தும் அரசாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். 'பி கூல், நோ டென்ஷன்' (Be Cool, No Tension). காத்திருங்கள் விரைவில் அறிவிப்போம். ஆட்சியில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. இது தமிழகத்திற்கும், மக்களுக்கும் நல்ல வாய்ப்பாக மாற்றமாக இருக்கும். வரும் ஆட்சி, மக்களே தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு. எனவே மக்கள் தான் அதற்கான எஜமானர்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும். உண்மையில் அப்படி ஒரு சுழல் வருகிறதா என்று நாம் பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஈஷா யோகா மையத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், எல்.முருகன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் மரியாதை நிமித்தமாக பேசினேன். பிரதமர் தமிழகம் வருகை நல்லது தான். அதனால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் முதலில் வரவேற்போம். அவர் வருவது தப்பு ஒன்னும் கிடையாது. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் தமிழகம் சிறப்பாக வர வேண்டும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3