சென்னையில் நடைபெற உள்ள BBL T20 தொடர்? அவுஸ்திரேலியா பரிசீலனை
18 மாசி 2026 புதன் 07:15 | பார்வைகள் : 2068
BBL T20 தொடரின் ஒரு போட்டியை சென்னையில் நடத்த அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.
2025 - 26 BBL தொடரில் சிட்னி தண்டர் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ஆனால், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. BBL தொடரின் பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கில், இந்திய நகரத்தில் ஒரு போட்டியை நடத்துவது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்து வருகிறது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த 2 நிர்வாகிகள், வணிக நடவடிக்கைகளின் தலைவர் பில் ரிக்பி மற்றும் போட்டி மேம்பாடு தலைவர் மார்கோட் ஹார்லி ஆகியோர் சென்னையில் BBL போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வருகை தந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஒரு BBL போட்டியை சென்னையில் நடத்துவது குறித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கு BCCI மற்றும் ஒளிபரப்பாளர்களிடமிருந்து பல்வேறு வகையான அனுமதிகள் தேவைப்படும் என கூறப்படுகிறது.
இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டால், சென்னையில் விளையாடும் அணிகளில் ஒன்றாக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 6 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான BBL அணியாக உள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire