வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா; பியூஷ் கோயல் நம்பிக்கை
19 மாசி 2026 வியாழன் 05:04 | பார்வைகள் : 2026
2047ம் ஆண்டுக்குள் 30 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி, வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மும்பையில் நடந்த சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பியூஷ் கோயல் கூறியதாவது:
கூட்டணிகள், நட்புறவுகளை உருவாக்குதல்,உலகின் பிற பகுதிகளுடன் நமது முதலீட்டை இணைப்பது ஆகியவற்றில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்று நம்புகிறேன். 2047ம் ஆண்டுக்குள் 30 -35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாகி வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். தனித்து வாழக்கூடிய நாட்கள் போய்விட்டன.
இப்போது சந்தைகளை பாதுகாக்க வேண்டும். முதலீட்டை ஈர்க்க வேண்டும். வர்த்தக வாய்ப்புகளை பாதுகாக்க வேண்டும். சிறந்த தொழில்நுட்பங்களை கொண்ட நாடுகளுடன் தொடர்பில் ஈடுபடுவதுடன், நமது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை திறக்க வேண்டும். இவை அனைத்து வளர்ச்சிக்கானது.
2022 முதல் 9 ஒப்பந்தங்களை போட்டு உள்ளோம். இந்த ஒப்பந்தங்கள் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. எதிர்காலத்துக்காக நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். கடந்த காலத்தில் எங்களுக்கு பல பிரச்னைகள் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் வழங்குவது இந்தியாவின் எதிர்காலத்தில் பங்கேற்க ஒரு வாய்ப்பாகும். இந்திய பொருளாதாரத்திற்கு 26 டிரில்லியன் டாலர்களை சேர்த்துள்ளோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
தந்தை போல பிரதமர்பியூஷ் கோயல் மேலும் கூறியதாவது:பிரதமர் மோடி தந்தை போல் செயல்படுகிறார். தனது பதவிக்காலத்தில் இதுவரை யாரையும் அவர் திட்டியது கிடையாது. குரலை உயர்த்தி பேசியதாவது. பெற்றோரை போல் கைகளை பிடித்து கொள்கிறார். நாங்கள் சொல்வதை உன்னிப்பாக கவனிக்கிறார். 100 சதவீதம் அதில் கவனம் செலுத்துகிறார். தனது குழுவினர் நலன் குறித்து அக்கறை கொள்கிறார், வழிநடத்துவதுடன், ஊக்கம் அளிக்கிறார்.அமெரிக்கா இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் நமது விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில்துறையினர் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். ஒரு விவசாயி கூட கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire