Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

19 மாசி 2026 வியாழன் 08:20 | பார்வைகள் : 1896


பிரதமர் மோடியை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார்.

20 நாடுகளின் தலைவர்கள், 45 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஏஐ மாநாடு தலைநகர் டில்லியில் கடந்த 16ம் தேதி துவங்கியது. 20ம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டில் கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.

மனிதவள மேம்பாடு, சமுக மேம்பாடு, பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட 7 முக்கிய துறைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை இன்று டில்லி வந்தார்.  தொடர்ந்து,  பிரதமர் மோடியை சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் ஏஐயின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினர்.

சுந்தர் பிச்சை வரும் 20ம் தேதி ஏஐ மாநாட்டில் உரை நிகழ்த்த இருக்கிறார்.  அப்போது, ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது இந்திய வருகை குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த சுந்தர் பிச்சை, ஆங்கில செய்தித்தாள்களில் ஏஐ மாநாடு குறித்த விளம்பரப்பக்கத்தை பகிர்ந்திருந்தார். அவர் விடுத்துள்ள பதிவில், 'ஏஐ மாநாட்டில் பங்கேற்க  இந்தியாவுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வழக்கம்போல, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தித்தாள்களை பார்ப்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கிறது,'  எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக,  ஏஐ மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸை, பிரதமர் மோடி டில்லி ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினார்

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3