Paristamil Navigation Paristamil advert login

நிரம்பி வழிகிறது சென் நதி! - பல்வேறு வீதிகள் மூடப்பட்டுள்ளன!!

நிரம்பி வழிகிறது சென் நதி! - பல்வேறு வீதிகள் மூடப்பட்டுள்ளன!!

18 மாசி 2026 புதன் 18:34 | பார்வைகள் : 4111


இன்று வியாழக்கிழமை பிற்பகலின் பின்னர் பரிஸ் மற்றும் அதனைச் சூழ உள்ள சில பகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக “மறுஅறிவித்தல் வரை” வீதிகள் மூடப்பட உள்ளன. குறிப்பாக  Tuileries சுரங்கப்பாதை நண்பகலின் பின்னர் மூடப்பட்டது.  நேற்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென் நதியின் நீர்மட்டம் 3.54 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது.

தொடர்ச்சியாக விடுக்கப்படுள்ள மழை புயல் எச்சரிக்கையினால், அனர்த்தங்கள் தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதேவேளை, வெள்ளிக்கிழமை 3.55 மீற்றர் உயரத்தை எட்டும் அபாயம் உள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் நீர்மட்டம் 2.30 மீற்றர் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்