டெல்லியில் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட மக்ரோன்!!
19 மாசி 2026 வியாழன் 08:01 | பார்வைகள் : 3065
Emmanuel Macron, டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், Europe ஒரு « பாதுகாப்பான இடம் » என்றும் அது கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளில் மட்டும் மட்டுபடுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளை அமைக்க உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். உச்சிமாநாட்டில் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொதுச்செயலாளர் Antonio Guterres ஆகியோர், செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், அதன் எதிர்காலம் சில பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் சமத்துவத்தையும் உள்ளடக்கத்தையும் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப உலகின் முக்கிய நபர்களான Sam Altman, Demis Hassabis ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதேசமயம், Bill Gates, பாலியல் குற்றவாளி Epstein தொடர்பான சர்ச்சை காரணமாக உரையாற்றவில்லை.
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளும் எழுந்துள்ளன. இந்தியாவில் பெருமளவில் முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. OpenAI, Google, Microsoft, Nvidia போன்ற நிறுவனங்கள் தரவு மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இருந்தாலும், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிட இந்தியாவுக்கு இன்னும் சவால்கள் உள்ளன என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire