SNCF அதிகாரிகளுக்கு சோதனை அடிப்படையில் taser அணிய அனுமதி!!
19 மாசி 2026 வியாழன் 21:48 | பார்வைகள் : 3820
போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot, SNCF பாதுகாப்பு அதிகாரிகளில் 10% பேருக்கு taser (மின்சார அதிர்ச்சி ஆயுதம்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது உடல் தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் குற்றச்செயல்களுக்கு பதிலளிக்கும் வகையில் சோதனை முயற்சியாக தொடங்கப்படுகிறது.
தேவையான பயிற்சிக்குப் பிறகு 300 முதல் 400 அதிகாரிகள் முதற்கட்டமாக இதனை பயன்படுத்துவார்கள். அதிகாரிகள் தங்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய தேவையான கருவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Belgium மற்றும் United Kingdom போன்ற நாடுகளில் கத்திக்குத்து தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டேசர் (taser) பயன்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளார். இந்த திட்டம் படிப்படியாக அமுல்படுத்தப்படும் என்றும், மூன்று ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடிமக்களின் பாதுகாப்பு தேவையை முன்னிலைப்படுத்தி, இது தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அதிகாரிகளுக்கு உடல் கேமராக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
2016 முதல் போக்குவரத்து துறையில் குற்றச்செயல்கள் மொத்தத்தில் 2% குறைந்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டு 107,080 சம்பவங்களில் வன்முறை திருட்டுகள் 2% மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் 7% அதிகரித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire