ரபேல் விமானங்கள் இந்தியாவை வலிமையானதாக மாற்றும்: பிரான்ஸ் அதிபர்
20 மாசி 2026 வெள்ளி 05:05 | பார்வைகள் : 1857
ரபேல் விமானங்கள் இந்தியாவை வலிமையானதாக மாற்றும். அதனை ஏன் இங்கு விமர்சிக்கின்றனர் என்பது குறித்து தெரியவில்லை என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ரபேல் போர் விமானங்களின் பாகங்கள் குறித்து அதனை தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்துக்கும், இந்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த விமானங்கள் இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதுடன், இரு நாட்டு உறவை வலுப்படுத்தும். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு சாதாரணமானது அல்ல. இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு தனித்துவமானது. இதனை இன்னும் முன்னேறி கொண்டு செல்கிறோம். இதில் ரபேல் விமானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.அதிகளவு இந்திய உதிரிபாகங்கள் இருப்பதையும், முக்கியமான சாதனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என உறுதிபூண்டுள்ளோம். டாடா ஏர்பஸ் ஒப்பந்தத்தில் உள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்திலும் அது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 114 போர் விமானங்கள் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire