"Rachida Dati ஜனநாயகத்திற்கு ஒரு அபாயம்": Anne Hidalgo விமர்சனம்!!
20 மாசி 2026 வெள்ளி 08:27 | பார்வைகள் : 3152
பரிஸ் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, தற்போதைய கருத்துக் கணிப்புகளில் Emmanuel Grégoire மற்றும் Rachida Dati முன்னிலையில் உள்ள நிலையில், மேயர் Anne Hidalgo, France Inter வானொலியில் பேசியபோது, தனது எதிரியான Rachida Dati « ஜனநாயகத்திற்கு ஒரு அபாயம் » எனக் கூறியுள்ளார். தனது முன்னாள் முதல் துணை மேயரான Emmanuel Grégoire-க்கு ஆதரவு அளிப்பதாக Anne Hidalgo மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
செப்டம்பர் 16 முதல் Dati ஊழல் மற்றும் செல்வாக்கு வர்த்தக குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது என்று அவர் நினைவூட்டியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றாலும், தண்டனை விதிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார். சமீபத்தில் தண்டிக்கப்பட்ட Marine Le Pen, Nicolas Sarkozy மற்றும் Gaël Perdriau ஆகியோரையும் அவர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ளார்.
Rachida Dati, 2010–2012 காலத்தில் Renault-Nissan Alliance உடன் தொடர்புடைய நிறுவனத்திடமிருந்து 900,000 யூரோக்களை பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறார். Parquet national financier இதனை நலன் மோதலாகக் கருதுகிறது. இருப்பினும், Dati குற்றச்சாட்டுகளை மறுத்து தன்னை நிரபராதி என வலியுறுத்தி வருகிறார்.
மேலும், Anne Hidalgo பரிஸின் பாடசாலைக்கு பிந்தைய சேவைகளில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து « மேம்பாடுகள் தேவை » என்று ஒப்புக்கொண்டுள்ளார். தவறுகள் ஏற்பட்ட இடங்களில் தகவல் மேல் மட்டத்திற்கு தெரிவிக்கப்படாததே பிரச்சினை எனக் கூறி, பொறுப்புள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire