Paristamil Navigation Paristamil advert login

ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை ராகுல் கண்டிக்காதது ஏன்? அண்ணாமலை

ஏஐ மாநாட்டில்  காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை ராகுல் கண்டிக்காதது ஏன்? அண்ணாமலை

22 மாசி 2026 ஞாயிறு 12:03 | பார்வைகள் : 2051


ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: காங்கிரஸ் கட்சி தன்னை நாட்டின் தலைகுனிவு என மீண்டும் நிரூபித்துவிட்டது. ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்?  ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த ஒரு நிகழ்வில் நாட்டை அவமானப்படுத்தும் முயற்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏஐ உச்சிமாநாடு 250 பில்லியன் டாலருக்கு மேலான முதலீடுகளையும், 20 பில்லியன் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டால் இவ்வளவு தொழில்நுட்ப முதலீடுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை இதுதான். இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தில் உலகம் நம்பிக்கை வைத்த போது, காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு மேலாக நாடகத்தை தேர்ந்தெடுத்தது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3