இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை அறிவது எப்படி?
24 மாசி 2026 செவ்வாய் 10:52 | பார்வைகள் : 2020
வாக்காளர் பட்டியலில் தகுதி பெற்ற வாக்காளர் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சில வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளும் வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீலிர திருத்தத்துக்கு பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) வெளியிடப்பட்டது. தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள இந்த பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர் உள்ளனர். நீக்கப்பட்டவர்கள் மொதத எண்ணிக்கை 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 ஆகும்.
இந் நிலையில் வாக்காளர் பட்டியலில் தகுதி பெற்ற வாக்காளர் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சில வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். வாக்காளர் அடையாள அட்டை எண் , தகவல்களை தேடுவது, தொலைபேசி எண் மூலம் தெரிந்து கொள்வது ஆகிய வழிகள் இருக்கின்றன. இந்த வழிமுறைகளை பின்பற்ற முதலில் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
பின்னர், அடையாள அட்டையில் இருக்கும் வாக்காளர் அட்டை எண், எந்த மாநிலம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து, பெயர் உள்ளதா என சரிபார்க்கலாம். நீங்கள் புதிய வாக்காளர், அடையாள அட்டை எண் சரியாக தெரியாதவராக இருந்தால். தேர்தல் கமிஷன் கேட்டுள்ள உரிய விவரங்களை உள்ளீடு செய்து தங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பது அறிந்து கொள்ளலாம்.
மாநிலம், வாக்காளர் பெயர்,பாலினம். உறவினர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகிய தகவல்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். கடைசி வழிமுறையாக செல்போன் எண் மூலம் வாக்காளர் பெயர் உள்ளதாக என்பதை கண்டுபிடிக்கலாம்.
அதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் எந்த செல்போன் எண் இணைக்கப்பட்டு உள்ளதோ, அதே எண்ணை பதிவிடலாம். பின்னர் ஓடிபி-யை சரியார்த்து விவரங்களை உள்ளீடு செய்தால் அனைத்து விவரங்களையும் அறியலாம். இதற்கு வியூ டீடைல்ஸ் (View details) என்ற இடத்தை க்ளிக் செய்தால் சம்பந்தப்பட்ட பக்கத்திற்கு செல்லலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire