திருப்பதி லட்டு தயாரிப்பை பரிசோதிக்க ரூ.3,350 கோடியில் பிரான்ஸ் இயந்திரம் இறக்குமதி
24 மாசி 2026 செவ்வாய் 14:24 | பார்வைகள் : 2229
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்ய, 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான, 'இ - நோஸ்' மற்றும் 'இ - டங்' எனப்படும், 'மின்னணு மூக்கு' மற்றும் 'மின்னணு நாக்கு' என்ற அதிநவீன இயந்திரங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழு மலையான் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் சார்பில் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ஆந்திராவில் கடந்த முறை ஆட்சியில் இருந்த ஓய்.எஸ்.ஆர்., காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, லட்டு தயாரிப்புக்காக கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.அதில், 2019 முதல் 2024 வரை ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த பதவிக் காலத்தில், லட்டு பிரசாதம் தயாரிக்க 250 கோடி ரூபாய் அளவுக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது.
இதையடுத்து, லட்டு பிரசாதத்தின் தரத்தை உறுதி செய்யவும், பக்தர்களின் நம்பிக்கையை மீட் டெடுக்கவும் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, திருமலையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவு பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தம், 12,000 சதுர அடியில், இரு அடுக்குமாடிகள் கொண்ட தளமாக உருவாகி வரும் இந்த ஆய்வகத்தின் பணிகள், 90 சதவீதம் வரை நிறைவடைந்து விட்டது. அடுத்த மாதம் இந்த பரிசோதனைஆய்வகம் செயல்பாட்டுக்கு வரும்,” என, ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., -எம். எல்.ஏ.,வுமான சத்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார். அதன்பின், வரும் மே மாதம் இந்த ஆய்வகத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பில் ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து, 'இ -நோஸ்' மற்றும் 'இ-டங்' இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட உள்ளன.
மனிதர்களின் மற்றும் நாக்கு மூக்கு போல செயல்படும் இந்த இயந்திரங்கள், லட்டு தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் தரம், சுவை, நறுமணம் ஆகியவற்றை மிக துல்லியமாக ஆய்வு செய்யும்.மனிதர்களால் கண்டு பிடிக்க முடியாத நுணுக்கமான கலப்படத்தை கூட இந்த அதிநவீன இயந்திரங்கள் எளிதில் கண்டுபிடித்து விடும் என கூறப்படுகிறது.இந்த இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்க பயன்படும் நெய், முந்திரி, திராட்சை, பாதாம், சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பிற பிரசாதங்கள் தயாரிக்க பயன்படும் மஞ்சள் துாள், மிளகாய் துாள் என, 60 வகையான மூலப் பொருட்களின் தரம், இந்த இயந்திரங்கள் மூலம் பரிசோதிக்கப்படும்.அதன் பிறகே, மூலப் பொருட்கள் கொண்டு பிரசாதங்கள் தயாரிக்க அனுமதிக்கப்படும்.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire