Paristamil Navigation Paristamil advert login

விமான நிலையத்தில் பாரிய தீ! - எயார் பிரான்ஸ் விமானம் திரும்பியது!!

விமான நிலையத்தில் பாரிய தீ! - எயார் பிரான்ஸ் விமானம் திரும்பியது!!

24 மாசி 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2959


பரிசில் இருந்து புறப்பட்ட எயார் பிரான்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக திருப்பட்டு தரையிறப்பட்டது. விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக விமானம் திருப்பப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் லாகோஸ் நகர Murtala Muhammed சர்வதேச விமானநிலையத்தில் இந்த தீ பரால் நேற்று பெப்ரவரி 23, திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்த தீயினால் விமான கட்டுப்பாட்டு அறை முற்றாக தடைப்பட்டது. அதை அடுத்து, குறித்த விமான நிலையம் நோக்கி புறப்பட்டு பறந்துகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று திரும்ப அழைக்கப்பட்டது.

எயார் பிரான்ஸ் விமானம் பிற்பகல் 3 மணி அளவில் மீள சாள்-து-கோலில் தரையிறங்கியது. மீள புறப்படும் திகதி குறித்து பயணிகளுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலில் சிக்கி மூவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்