அதிமுக - பாஜ பொருந்தாக்கூட்டணி: சொல்கிறார் திருமா
25 மாசி 2026 புதன் 08:53 | பார்வைகள் : 2031
அதிமுக - பாஜ இடையிலானது பொருந்தா கூட்டணி,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கால வாக்குறுதிகள் வழக்கமான வாக்குறுதிகள். அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் ரூ.10 ஆயிரம் அறிவிப்பை இபிஎஸ் செய்திருக்கலாம். இருந்தாலும், இதுபோன்ற அறிவிப்புகள் உழைக்கும் மக்களிடம் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது. திமுக அறிவித்ததற்கு போட்டியாக அதிமுக அறிவிக்கிறது என்ற புரிதல் மக்களுக்கு இருக்கும். எனவே, இது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்.
கல்வி, மருத்துவம் தவிர வேறு எதையும் இலவசமாக வழங்கக்கூடாது என ஏற்கனவே கூறியிருக்கிறோம். பெண்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த திமுக உரிமைத்தொகையாக வழங்குகிறது. இது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற, காலம் காலமாக வஞ்சிக்கப்பட்ட, அதிகாரம் இல்லாத நிலையில் இருக்கும் பெண்களை வலிமைப்படுத்தும் வகையில் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்கிறோம். மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வரவேற்கிறோம். இதனால் ஏற்படும் நிதிச்சுமை என்பது சமாளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் இந்த நிலைப்பாட்டை திமுக மேற்கொண்டு உள்ளது.
கடந்த காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருந்த சூழலிலும், மத்திய அரசு, மாநிலத்துக்கு ஒதுக்கவேண்டிய நிதி பங்கீட்டை தவிர்த்தும் கூட தமிழகத்துக்கான ஜிடிபி அளவை உயர செய்திருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமே ஆனால், இந்த நிதிச்சுமையையும் வெற்றிகரமாக கையாள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் அழைத்து பேச்சு நடத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு வரவில்லை. அழைக்கும்போது எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தி உரிய தொகுதிகளை கேட்டு பெறுவோம்.
அதிமுகவை சீண்டுகிறார்
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என மக்கள் பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே போட்டி என விஜய் சொல்வதன் மூலம் அதிமுகவை குறைத்து மதிப்பிடுகிறார். அதிமுகவை சீண்டுகிறார். அதிமுக ஒரு பொருட்டே அல்ல என்று விமர்சிக்கிறார்.
அவருடைய விமர்சனம் அதிமுகவுக்கு எதிரான விமர்சனமாகவே இருக்கிறது. அதிமுகவை விமர்சிக்கிறார் என்றால் அதிமுக பாஜ அணியை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தான் தோன்றுகிறது. அவர் என்ன எதிர்பார்ப்பில் இந்த கருத்துகளை பேசுகிறார் என புரியவில்லை. பொறுத்து இருந்து பார்ப்போம்
திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் இடையே தான் போட்டி. தமிழகத்தை பொறுத்தவரை இரு துருவ போட்டிகளாக தான் தேர்தலாக தான் தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலும் அப்படியே அமைய இருக்கிறது.
ஜெயலலிதாவை பொறுத்தவரை வெளிப்படையாக மோடியை எதிர்ப்பை தொடர்ந்து பேசியவர். பாஜவுடன் அதிமுக எந்த காலத்திலும் கூட்டு வைக்காது என அறிவிப்பு செய்தார். அதிமுக பாஜ வுக்கு இடையே அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு இருக்கிறது. முரண்பாடு இருக்கிறது. இடைவெளி இருக்கிறது. ஆனால், அதிமுக பாஜ கூட்டணி அமைந்திருக்கிறது. இது பொருந்தாக் கூட்டணி என்பதால், எம்ஜிஆர், ஜெயலலிதாவை மோடி அழைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire