வாடகை பாக்கிகள் இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நேரடியாக வழங்கப்படும் APL!!
24 மாசி 2026 செவ்வாய் 17:46 | பார்வைகள் : 4849
2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் புதிய உத்தரவுகளின்படி, வாடகை பாக்கி ஏற்பட்டால் வீட்டு உதவித்தொகை (APL) நேரடியாக வீட்டு உரிமையாளரின் கணக்கில் செலுத்தப்படும். 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “கஸ்பாரியன் சட்டம்” (loi Kasbarian) அடிப்படையில் வெளியிடப்பட்ட இந்த மாற்றங்கள், அதிகரித்து வரும் வாடகை பாக்கி பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும், வீட்டு உரிமையாளர்களை பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டவையாகும்.
இந்த புதிய விதிகள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். முக்கியமாக இரண்டு மாற்றங்கள் உள்ளன:
- வாடகை பாக்கி என்று கருதப்படும் வரம்பு மாற்றப்படுகிறது.
- அந்த வரம்பு எட்டப்பட்டதும், வீட்டுஉரிமையாளருக்கு APL நேரடியாக வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்படுகிறது.
இதுவரை, இரண்டு மாத வாடகைக்கு சமமான தொகை (உதவித்தொகை கழித்த பிறகு) சேரும்போது மட்டுமே பாக்கி என கருதப்பட்டது. ஆனால் 2027 முதல், மொத்த பாக்கி 450 யூரோக்களை கடந்தாலோ அல்லது தொடர்ந்து மூன்று மாதங்கள் வாடகை செலுத்தாத நிலையிலோ (மொத்தம் 450 யூரோவுக்கு குறைவாக இருந்தாலும்) இருந்தால் அது பாக்கியாக கணக்கிடப்படும்.
இந்த எளிய வரம்பு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால், வீட்டுஉரிமையாளர் இரண்டு மாதங்களுக்குள் CAF அல்லது MSA-க்கு தகவல் அளிக்க வேண்டும். அதன் பிறகு, APL தொகை நேரடியாக வீட்டு உரிமைளாருக்கு வழங்கப்படும். இதனால் வீட்டுஉரிமையாளர் குறைந்தபட்சமாக ஒரு பகுதி வாடகையைப் பெறுவார். வாடகையாளரின் கடனும் ஓரளவு குறையும்; இது கடன் சுழற்சியில் சிக்காமல் இருக்க உதவலாம். அதே நேரத்தில், வீட்டுஉரிமையாளர் வாடகையாளருடன் தவணைத் திட்டம் போன்ற தீர்வுகளை முயற்சிக்க வேண்டும்; இல்லையெனில் உதவித்தொகை நிறுத்தப்படலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire