ரூ.11,000 கோடிக்கு ஒப்பந்தம்: ஜப்பானில் உ.பி., முதல்வர்
26 மாசி 2026 வியாழன் 06:35 | பார்வைகள் : 1823
அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல்நாளிலேயே 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார். சிங்கப்பூர் பயணத்தின் போது, உ.பி.,யில் முதலீடு செய்வது தொடர்பாக பல பன்னாட்டு நிறுவனங்களுடன் அவர் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
இதையடுத்து, ஜப்பான் சென்ற யோகி, அந்நாட்டின் பிரபல நிறுவனங்களின் உயரதிகாரிகள், நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினார். பின், அங்குள்ள நிறுவனங்களுடன் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.
விவசாயம் மற்றும் தொழில்துறை இயந்திரங்களுக்கு பெயர் பெற்ற, 'குபோடா கார்ப்பரேஷன்', சென்சார்கள், மின்சார வாகன தீர்வுகளை வழங்கும் முக்கிய வாகன உதிரி பாக உற்பத்தியாளர், 'மிண்டா கார்ப்பரேஷன்' ஆட் டோமொடிவ் மற்றும் விண் வெளித் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, 'ஜப்பான் ஏவியேஷன் எலக்ட்ரானிக் இண் டஸ்ட்ரி' உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரசாயனங்கள், மின்னணுவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 'நாசே அண்டு கோ' உயர் செயல்திறன் கொண்ட ஸ்கிரீன் பிரிண்டிங் மைகளுக்கு பெயர் பெற்ற, 'சீகோ அட்வான்ஸ்' உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நீர் மற்றும் சுற்றுசூழல் தொடர்பான உள்கட்ட மைப்பு தீர்வுகள், ஆட்டோ மொபைல்ஸ், கிராபிக்ஸ், விருந்தோம்பல் உள்ளிட்ட துறைகளில் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire