ரஜினி - கமல் படத்தில் வில்லன் யார்?
26 மாசி 2026 வியாழன் 14:26 | பார்வைகள் : 2215
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 'தலைவர் 174'. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் முதல் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் ஸ்டைலான தோற்றம் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அனிருத்தின் மாஸ் மியூசிக்கும் சேர, 'தலைவர் 174' ப்ரோமோ களைகட்டியுள்ளது.
நெல்சனும் அனிருத்தும் வீடியோவில் தோன்றுகிறார்கள். 'யார் ஹீரோ?' என்ற கேள்வியுடன் வீடியோ முடிகிறது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைகின்றனர். இந்த படத்தில் ரஜினி தான் ஹீரோவாக இருப்பார் என்றும் கமல் வில்லனாக இருப்பார் என்றும் பேச்சுகள் அடிபட்டு வந்தன. ஆனால் அதில் புது ட்விஸ்டாக இதில் வில்லனாக நடிக்க மற்றுமொரு முன்னணி நடிகரை படக்குழு அணுகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அந்த நடிகர் வேறுயாருமில்லை மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி தான். அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
முன்னதாக ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவான 'ஜெயிலர்' படத்தில் விநாயகன் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மம்மூட்டி தான் முதலில் பரிசீலிக்கப்பட்டார். ஆனால் கிளைமாக்ஸ் தொடர்பான குழப்பத்தால் மம்மூட்டி அந்த வாய்ப்பை நிராகரிக்க, அவருக்கு பதிலாக விநாயகன் தேர்வு செய்யப்பட்டதாக நெல்சன் கூறியிருந்தார். சமீபத்தில் 'களம்காவல்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார் மம்மூட்டி. அவர் ரஜினி - கமல் படத்தில் வில்லனாக நடித்தால் அப்படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு தற்போது வெளிவந்தாலும் அதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தான் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ரஜினி கைவசம் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படமும், கமல்ஹாசன் கைவசம் அன்பறிவு இயக்கும் படமும் உள்ளது. இந்த படங்களில் நடித்து முடித்த பின்னரே, ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க உள்ளார்கள். இப்படத்தை ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி தான் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire