பரிஸ் மேயர் தேர்தலை முன்னிட்டு, Rachida Dati கலாச்சார அமைச்சர் பதவியிலிருந்து விலகல்!!
26 மாசி 2026 வியாழன் 21:37 | பார்வைகள் : 3007
பரிஸ் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும்6 0 வயதான Rachida Dati, 2024 ஜனவரி முதல் வகித்து வந்த கலாச்சார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வலதுசாரி மற்றும் ஜனாதிபதி அணியின் ஆதரவுடன் போட்டியிடும் அவர், தேர்தலுக்கு முன் பதவி விலகுவதாக முன்பே தெரிவித்திருந்தார். “இந்த பொறுப்பில் பணியாற்றியது எனக்கு பெருமை,” என்று கூறிய அவர், முதல் சுற்றிலேயே வாக்காளர்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரம் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அமைச்சராக இருந்த காலத்தில், Rachida Dati பொது ஒலிபரப்புத் துறை சீர்திருத்தத் திட்டத்தை முன்னெடுத்து, France Télévisions, Radio France மற்றும் Institut national de l'audiovisuel ஆகியவற்றை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர முன்மொழிந்தார். ஆனால் அரசியல் மாற்றங்கள் மற்றும் பட்ஜெட் விவாதங்கள் காரணமாக திட்டம் தாமதமானது. தற்போது அதன் எதிர்காலம் தெளிவற்றதாகவே உள்ளது.
அவர் இடதுசாரி வேட்பாளர் (LFI அல்லாத) Emmanuel Grégoire உடன் கடும் போட்டியில் உள்ளார். பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, இரண்டாம் சுற்றில் நேரடி மோதல் அல்லது மும்முனைப் போட்டி ஏற்பட்டாலும், ஏழாவது வட்டார மேயரான அவர் சமூகநலவாத வேட்பாளரை சில சூழ்நிலைகளில் முன்னிலை வகித்து வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire