ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கும் யுவன்
27 மாசி 2026 வெள்ளி 13:11 | பார்வைகள் : 2550
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 3 என்ற படத்தை இயக்கி அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினி, அதன்பிறகு கவுதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை படத்தை அடுத்து ரஜினி முக்கிய வேடத்தில் நடித்த லால் சலாம் என்ற படத்தையும் இயக்கினார்.
இந்நிலையில் அடுத்தபடியாக தனது நான்காவது படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஐஸ்வர்யா. இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அவர்களது ஒன்பதாவது படமாகும். இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகாத நிலையில், தற்போது இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய வை ராஜா வை படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் அவர்களது கூட்டணி இணையப்போகிறது
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire