மஹிந்திராவின் ஸ்டைலான BE.07 மின்சார SUV 2027-ல் அறிமுகம்
27 மாசி 2026 வெள்ளி 14:35 | பார்வைகள் : 2086
மஹிந்திரா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மின்சார SUV-ஐ 2027ல் அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது “B07” என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கப்படும் இந்த வாகனம், 2022-ல் வெளியிடப்பட்ட BE.07 கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டது.
முதலில் 2026 இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போது 2027-க்கு மாற்றப்பட்டுள்ளது.
B07 என்பது உள்கட்டமைப்பு பெயர் மட்டுமே. இறுதி தயாரிப்பு வாகனம் வேறு பெயரில் சந்தைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா 2022ல் XUV.e8, XUV.e9, BE.05, BE.07, BE.09 என ஐந்து கான்செப்ட் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இதில் BE.05, XUV.e8, XUV.e9 ஆகியவை ஏற்கனவே தயாரிப்பு மாடல்களாக BE6, XEV 9S, XEV 9e என சந்தையில் வந்துள்ளன.
BE6 மற்றும் XEV 9e சேர்ந்து 41,000க்கும் மேற்பட்ட விற்பனையை கடந்துள்ளன.
புதிய BE.07 SUV, மஹிந்திராவின் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும். இதில் 60 kWh முதல் 80 kWh வரை பேட்டரி விருப்பங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BE.07 கான்செப்ட் மாடலில் மூன்று பெரிய triple-screen கொண்ட டாஷ்போர்டு, dashboard, panoramic sunroof, குறைந்த physical buttons, haptic controls போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த SUV, மஹிந்திராவின் மின்சார வாகன வரிசையில் முக்கிய பங்கு வகிக்கும் என நிறுவனம் நம்புகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire