Cegedim மீது சைபர் தாக்குதல்: 15 மில்லியன் நோயாளிகள் பாதிப்பு!!
27 மாசி 2026 வெள்ளி 15:24 | பார்வைகள் : 2976
மருத்துவ மென்பொருள் நிறுவனம் Cegedim மீது 2025 இறுதியில் நடைபெற்ற சைபர் தாக்குதலால் சுமார் 15 மில்லியன் நோயாளிகளின் தகவல்கள் கசிந்துள்ளன. 3,800 மருத்துவர்கள் பயன்படுத்தும் மென்பொருளில் 1,500 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான கசிந்த தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற நிர்வாகத் தகவல்களாகும். சம்பவம் அரசின் உள்கட்டமைப்பைச் சார்ந்ததல்ல என்றும், இது தனியார் மென்பொருளை குறிவைத்த தாக்குதல் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சுமார் 1,69,000 பேரின் நுணுக்கமான குறிப்புகள் (மருத்துவர்களின் « texte libre » பகுதியில் உள்ள தனிப்பட்ட குறிப்புகள்) வெளியாகியிருக்கலாம். கட்டமைக்கப்பட்ட மருத்துவக் கோப்புகள் பாதிக்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. CNIL மற்றும் ANSSI ஆகிய அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமருத்துவர்களின் சங்கமான MG France, இந்த தகவல் கசிவுக்காக தனிப்பட்ட மருத்துவர்கள் பொறுப்பல்ல என தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire