Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி

காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக உறுதி

28 மாசி 2026 சனி 11:36 | பார்வைகள் : 2078


காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.

சென்னை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் திமுக-இடையே முதற்கட்ட பேச்சு நடந்தது. திமுக குழுவினரை கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.  இதில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சியினர் கொடுத்துள்ளனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு, ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று திமுக தலைமை உறுதி அளித்துள்ளதாக, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இது குறித்து செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நம்பிக்கையுடன் சென்று கொண்டு இருக்கிறது.

எந்தவித பிரச்னையும் இல்லை. காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக ஏற்கனவே முதல்வர் கூறி இருக்கிறார். திமுக உடன் எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. நம்பிக்கையான, உறுதியான கூட்டணி. தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி.

ஒருபோது தமிழகத்தில் பாஜவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்கள் தலைவர் ராகுல் இந்த மண்ணின் மீது பற்று வைத்து இருக்கிறார். தமிழகத்தின் மீது பற்று வைத்து இருக்கிறார்.

நாங்கள் திமுகவுடன் தான் பேச்சு நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது கையெழுத்திடும் போது தெரியவரும். இவ்வாறு செல்வபெருந்தகை கூறினார்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2