விஜய்- சங்கீதா விவகாரம் பற்றிய கேள்விக்கு அண்ணாமலை
28 மாசி 2026 சனி 10:41 | பார்வைகள் : 2186
அரசியலுக்கு வந்து விட்டோம் என்றால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருகிற மாதிரி தான்,'' என்று நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான கேள்விக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
விஜய் மனைவி டிசம்பர் மாதம் விவாகரத்துக்காக செங்கல்பட்டு கோர்ட்டில் பெட்டிசன் பதிவு செய்திருந்தார். இன்றைக்கு அது வெளியே வந்திருக்கிறது. நான் எப்பொழுதும் சொல்வது தான். இது, நடிகர் விஜய், அவருடைய மனைவி மற்றும் கோர்ட் இந்த மூன்று பேருக்கு இடையே உள்ள பிரச்னையாக தான் நான் பார்க்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கை
u003eஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்கிறேன். விஜயின் அரசியல் கருத்துக்கு நான் எப்பொழுதும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். இது தனிப்பட்ட வாழ்க்கை. கணவருக்கும், மனைவிக்கும் எங்கே இருந்தாலும் சந்தோஷம், அமைதி கிடைக்கட்டும். அதனால் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
விஜய், மனைவி, கோர்ட் இடையே நடக்கும் பிரச்னையை நான் அரசியல் படுத்த விரும்பவில்லை. அரசியலுக்கு வந்து விட்டோம் என்றால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருகிற மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத உங்களது தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் அரசியலுக்கு வந்த பிறகு தோண்டுவார்கள். இது எல்லா தலைவர்களுக்கும் இருந்தது தான். அது விஜய் அவர்களுக்கும் இருக்கிறது.
அவர் அரசியலுக்கு வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இதை கடந்து தான் போக வேண்டும். இதனை தாண்டி தான் அவருடைய அரசியல் இருக்கிறது இதையெல்லாம் பார்த்து தான் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா, ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்
ஒரு சினிமா நடிகராக வீட்டில் நிம்மதியாக இருந்திருக்கலாம். நான் நட்சத்திர மதிப்போடு இருந்திருக்கலாம். கைய தூக்கி காட்டினால் ஒரு லட்சம் பேர் வந்து ஆரவாரம் செய்யலாம். சிரஞ்சீவிக்கு ஏற்பட்டது தான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு அழுத்தத்துடன் தான் அவர்கள் வெளியே வர வேண்டும். இது எம்ஜிஆர்க்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால் இதை பாசிடிவ், நெகட்டிவ் என்று நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதனை கடந்து போக வேண்டும். இதற்கான விலையை கொடுக்க வேண்டும். இதற்கான நியாய, தர்மத்தை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டும். அதனால் இதனை ஒரு தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்னையாக நான் பார்க்கிறேன். இதில் நான் இந்த நேரத்தில் ஒரு தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனத்தை வைத்து அதை அநாகரிகமாகவோ, அரசியலாக்கவோ நான் விரும்பவில்லை. என்னுடைய அரசியல் அப்படிப்பட்ட அரசியல் கிடையாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire