கட்டாரை இலக்கு ஏவுகணை அச்சுறுத்தல்....
28 மாசி 2026 சனி 13:35 | பார்வைகள் : 2051
கட்டார் தலைநகர் டோஹாவில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முன்னதாக, கட்டாரை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட தடுப்புச் செயல்பாடுகளே இந்த வெடிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குவைட் நாட்டிலும் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
சம்பவங்களையடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் சூழ்நிலையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan