மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் - ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்
28 மாசி 2026 சனி 14:27 | பார்வைகள் : 2345
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்,
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கின் பல நாடுகளின் வான்பரப்பு மூடப்பட்டுள்ளமையால் விமானச் சேவைகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விமானச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் சில விமானங்கள் சவூதி அரேபிய வான்பரப்பு ஊடாக மாற்று வழிகளில் இயக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire