சிறந்த பிரெஞ்சுப்பாண் - மீண்டும் வெற்றிவாகை சூடிய ஈழத்தமிழர்!!
28 மாசி 2026 சனி 16:17 | பார்வைகள் : 3807
பரிசில் ஆண்டு தோறும் இடம்பெறும் 'சிறந்த பிரெஞ்சுப் பாண்' போட்டியில் ஈழத்தமிழர் ஒருவர் வென்றுள்ளார்.
"Grand Prix de la Baguette de Tradition Française de la Ville de Paris 2026" போட்டியின் முடிவுகள் பெப்ரவரி 26, வியாழக்கிழமை வெளியாகியிருந்தது. அதில் 142 வெதுப்பகர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களில் ஒருவராக போட்டியிட்டிருந்த சிதம்பரப்பிள்ளை ஜெகதீபன் அவர்கள் வெற்றி பெற்று, முதலிடத்தை பெற்றார்.
அவர் தயாரித்திருந்த பிரெஞ்சுப் பாண் மிகுந்த சுவை மிகுந்ததாகவும், பிரான்சின் பாரம்பரிய சுவை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அதை அடுத்து அவருக்கு 4.000€ பரிசுத்தொகையும், எலிசே மாளிகைக்கு ஆண்டு முழுவதும் பிரெஞ்சுப் பாண் விற்பனை செய்யும் உரிமமும் பெற்றுள்ளார்.
அவரது வெதுப்பகம் பரிஸ் 14 ஆம் வட்டாரத்தின் 103 Rue Didot முகவரியில் உள்ள Fournil Didot எனும் வெதுப்பகமாகும்.
முன்னதாக இதே போட்டியில் 2023 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற தர்சன் செல்வராஜாவை ஞாபகம் இருக்கும் என நம்புகின்றோம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire