சாம்பியன் பட்டத்துடன் வெள்ளை மாளிகைக்கு செல்லும் மெஸ்ஸி!
1 பங்குனி 2026 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 1912
MLS சாம்பியன் பட்டம் வென்ற லியோனல் மெஸ்ஸியை, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்க தயாராக உள்ளார்.
லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) இன்டர் மியாமி CF அணி கடந்த டிசம்பரில் வான்கூவர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் MLS சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதனைத் தொடர்ந்து சாம்பியன் அணிகள் கௌரவிக்கப்படும் அமெரிக்க பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில், மெஸ்ஸி உட்பட அணியின் வீரர்கள், பிரதிநிதிகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளனர்.
அவர்களை உற்சாகமாக வரவேற்க அமெரிக்க வெள்ளை மாளிகை தயாராகியுள்ளது. லீக்கில் DC யுனைடெட்டை எதிர்கொள்ள இன்டர் மியாமி வாஷிங்டனுக்கு செல்லும்.
அந்த பயணத்திற்கு முன்னதாக, இந்த அதிகாரப்பூர்வ வருகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியாமி ஹெரால்டின் கூற்றுப்படி, கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த முறையான வரவேற்பில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 5ஆம் திகதி அவர்கள் ஜனாதிபதி ட்ரம்பை சந்திப்பார்கள்.
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறகு மற்றொரு ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire