மேற்காசியாவில் பதற்றம் ! பிரதமர் மோடி தலைமையில் மந்திரிசபை கூட்டம்
2 பங்குனி 2026 திங்கள் 07:46 | பார்வைகள் : 1970
பிரதமர் மோடி குஜராத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிந்ததும் புதுச்சேரி மற்றும் மதுரைக்கு வருகை தந்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திலும் அவர் பங்கேற்றார்.அவர் தமிழகத்தில் பல்வேறு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணம் முடிந்ததும் அவர் இரவு 9.30 மணியளவில் டெல்லி சென்று சேர்கிறார். .ஈரானில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் படுகொலை; இஸ்ரேல் தகவல். இதன்பின்பு அவருடைய தலைமையில் இன்றிரவு மந்திரிசபை கூட்டம் நடைபெறுகிறது.
ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.இந்த தாக்குதலால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நிலைமை பற்றி அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் தெரிவிக்கின்றது.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire