கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
2 பங்குனி 2026 திங்கள் 11:57 | பார்வைகள் : 1854
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில், 14 வயது சிறுமியருக்கான, நாடு தழுவிய, எச்.பி.வி., எனப்படும், 'மனித பாப்பிலோமா வைரஸ்' இலவச தடுப்பூசி திட்டத்தை, ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 'கார்டசில் 4' என்ற தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படும். இது, க ர்ப்பப்பை வாய் புற்று நோயை உண்டாக்கும் எச்.பி.வி., வைரஸ் வகை கள் 16 மற்றும் 18-க்கு எதிராகவும், அதேபோல், வகைகள் 6 மற்றும் 11-க்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆண்டுதோறும், 1.15 கோடி சிறுமியருக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமல்ல. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சம்மதத்தை பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது.
இந்நிலையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்க நாடு தழுவிய எச்பிவி தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு தழுவிய, எச்.பி.வி., தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்ததற்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன்.
உலக சுகாதார அமைப்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பு முயற்சியில் ஈடுபட்டு, பெண்கள் இந்த நோயிலிருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையை வாழ முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire