Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோன் - அமைச்சர்கள் கூடும் மற்றுமொரு அவரச சந்திப்பு!!

ஜனாதிபதி மக்ரோன் - அமைச்சர்கள் கூடும் மற்றுமொரு அவரச சந்திப்பு!!

2 பங்குனி 2026 திங்கள் 19:05 | பார்வைகள் : 3488


இன்று மார்ச் 2, திங்கட்கிழமை இரவு மற்றுமொரு பாதுகாப்பு கவுன்சில் (conseil de défense) கூட உள்ளது. ஜனாதிபதி மக்ரோன் தலைமையில் அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

யுத்தம் ஆரம்பித்து இன்று மூன்றாவது நாளில், மூன்றாவது கூட்டமாக இன்று இரவு 8.30 மணிக்கு இந்த பாதுகாப்பு கூட்டம் எலிசே மாளிகையில் கூடுகின்றது.

இன்று Île Longue (Finistère) நகருக்கு பயணமாகியிருந்த ஜனாதிபதி மக்ரோன், பரிசுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார். அதை அடுத்தே இந்த சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

மத்திய கிழக்கில் பிரான்ஸ் 5,100 இராணுவ வீரர்களை குவித்துள்ளது..

அணுகுண்டு தாக்குதலை தடுப்பதற்குரிய மையங்களை விஸ்தரிக்க வேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.