பொய்யை அவிழ்த்து விடுகிறார்: மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்
3 பங்குனி 2026 செவ்வாய் 08:58 | பார்வைகள் : 1907
தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க கனவு காண்பது தான், கானல் நீராக இருக்கும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், எல்லா துறைகளிலும், 'ஆல் ரவுண்டர்' ஆக உயர்ந்து இருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியில், 'நம்பர் 1' மாநிலம் என தமிழகத்தை, மத்திய பா.ஜ., அரசே பாராட்டி இருக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட, இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியாது.
அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம்; இதற்கு நேர்மறையான முற்போக்கு அரசாக தி.மு.க., ஆட்சி உள்ளது. மத்திய அரசின் உதவி இல்லாமல், அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்து இருக்கிறோம். எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு, அதை சரி செய்கிறோம்.
மதுரை வந்த பிரதமர் மோடி, சென்னை மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் குறித்து குற்றம் சாட்டியிருக்கிறார்.
அவர் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க., தான், இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தது. நாங்கள் வந்து மத்திய அரசிடம் சொல்லி, இப்போது தான் அந்த பணிகள் நடக்கின்றன.
தன்னால் குறிப்பிட்டு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை, மோடி அவிழ்த்து விட்டு இருக்கிறார். இதை விட பெரிய காமெடியும் அந்த மேடையில் அரங்கேறியது.
அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்' என பழனிசாமி சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக் கொண்டே, 'தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என பிரதமர் மோடி சொல்கிறார்.
யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் தான், அவர்கள் கூட்டணி இருக்கிறது. ஆனால், தி.மு.க., கூட்டணி என்பது எண்ணிக்கையில் அமைந்தது அல்ல; எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி.
பல கட்சிகள் புதிதாக இணைந்துள்ளன; இன்னும் இணைய இருக்கின்றன. அதனால், இதை நான் சவாலாக கருதவில்லை; கொள்கை கூட்டணியாக நாங்கள் கொண்டு செல்கிறோம்.
தி.மு.க., ஆட்சி அமைப்பது, கானல் நீராக இருக்கும் என மோடி சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க, பிரதமர் கனவு காண்பது தான் கானல் நீராக முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire