Paristamil Navigation Paristamil advert login

ப.சிதம்பரத்தை பகடைக்காயாக பயன்படுத்தும் காங்கிரஸ்: திமுகவுடன் பேச திடீர் ஏற்பாடு

ப.சிதம்பரத்தை பகடைக்காயாக பயன்படுத்தும் காங்கிரஸ்: திமுகவுடன் பேச திடீர் ஏற்பாடு

3 பங்குனி 2026 செவ்வாய் 13:17 | பார்வைகள் : 1989


திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர்.

தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை தொடர்பான முடிவை வெளியிட, தி.மு.க.,வுக்கு இன்று இரவு வரை காங்கிரஸ் தலைமை கெடு விதித்துள்ளது. தி.மு.க., குழுவினரிடம், காங்கிரஸ் குழுவினர் நடத்திய சமீபத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால், தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த சூழலில் இன்று (மார்ச் 03)  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசினார். அவருடன் காங்., தலைவர் செல்வப்பெருந்தகை உடன் சென்று இருந்தார்.

கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதி செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பி உள்ளது.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2