Paristamil Navigation Paristamil advert login

மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து!

மேற்காசிய போர் குறித்து இந்தியா கருத்து!

4 பங்குனி 2026 புதன் 07:34 | பார்வைகள் : 1925


மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கான தனது அழைப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக நாங்கள் குரல் எழுப்புகிறோம். மேற்காசியாவில் நிலவும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

ஏற்கனவே, பல உயிர்கள் துரதிர்ஷ்டவசமாக இழக்கப்பட்டுள்ளன, அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். வளைகுடா  நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு  மிகவும் முன்னுரிமை வாய்ந்தது.  வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை இந்தியாவும் உறுதியாக எதிர்க்கிறது.

ஏற்கனவே, கடந்த சில நாட்களில் இதுபோன்ற தாக்குதல்களின் விளைவாக சில இந்தியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, புனித ரமலான் மாதத்தில், பிராந்தியத்தின் நிலைமை  மோசமடைந்துள்ளது. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2