பிரான்சை சீண்டிப்பார்த்த ஈரான்! - பதிலடிக்கு தயாராகிறது பிரான்ஸ்!!
4 பங்குனி 2026 புதன் 06:00 | பார்வைகள் : 4627
இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட ஈரான் மீதான தாக்குதலின் பின்னர், ஈரான் வெறிகொண்டு பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த யுத்தத்தின் பிரான்ஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் நிலையில், இரு பிரெஞ்சு இராணுவத்தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் பிரான்சை சீண்டியது ஏன்..??
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளின் இராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் இரவுபகல் பாராமல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அழிக்கப்பட்ட இடங்களில் இரண்டு பிரெஞ்சு இராணுவ தளங்களும் உள்ளடங்குகின்றன.
இஸ்ரேல் தொடர்ந்து ஈரான் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. இதுவரை அங்கு அயதுல்லா-அலி-காமேனி உட்பட 700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல முக்கிய தளபதிகள், தலைவர்களும் இந்த பட்டியலில் பலியாகியுள்ளனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலமும், எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அயதுல்லா-அலி-காமேனியின் இழப்புக்கு பரிகாரமாக இடைவிடாது ஏவுகணைகளை ஏவி வருகிறது.
இந்த இலக்குகளில் சிக்குண்ட பிரெஞ்சு இராணுவ முகாம், பிரான்சை வெகுவாக சீண்டியிருக்கிறது.
கடந்த நான்கு நாட்களாக ஜனாதிபதி மக்ரோன் தலைமையில் “பாதுகாப்பு கவுன்சில்” தொடர்ச்சியாக இடம்பெற்று, அதன் முடிவில், இராணுவ பலத்தை பரிசோதித்து பார்ப்போம் என பிரான்ஸ் முடிவை எட்டியுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாள்-து-கோல் கப்பலை மத்திய தரைக்கடலுக்கு நகர்த்தியுள்ளது. ஏராளமான வெடிபொருட்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் போன்றவற்றோடு, தானியங்கி முறையில் ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நவீன வசதிகளையும் கொண்டுள்ளது சாள்-து-கோல்.
அதேவேளை ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் மத்திய கிழக்கெங்கும் வியாபித்துள்ளனர். ஆனால் தரைவழி தாக்குதலுக்கு இப்போதைக்கு பிரான்ஸ் தயாராகவில்லை.
முதற்கட்டமாக மத்திய கிழக்கில் உள்ள தங்களது மக்களை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் வெளியேற அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குலோடு, ஈரானை கூறுபோட பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகளும் கைகோர்க்க உள்ளதே தற்போது உள்ள நிலவரம்.
பிரான்ஸ் தாக்குதல் மேற்கொண்டால், ஈரான் பிரான்சை தாக்கும் நாள் தொலைவில் இருக்காது. அழிவுகளை எதிர்கொள்ள தயாராவோம்!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire