இலங்கையில் 737 பேர் அதிரடியாக கைது!
1 மாசி 2026 ஞாயிறு 10:26 | பார்வைகள் : 2258
இலங்கைஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 05 கிலோகிராம் 509 கிராம் ஹெரோயின், 01 கிலோகிராம் 694 கிராம் ஐஸ், 01 கிலோகிராம் 835 கிராம் கஞ்சா, 1,585 கஞ்சா செடிகள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 592 போதை மாத்திரைகள், 01 கிராம் 204 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 53 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், 727 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 06 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire