0 பந்தில் விக்கெட் எடுத்த கோஹ்லி! அரிய உலக சாதனை...
2 மாசி 2026 திங்கள் 12:37 | பார்வைகள் : 2008
சர்வதேச கிரிக்கெட்டில் 0 பந்தில் விக்கெட் எடுத்த வீரர் என்ற அரிய சாதனையை விராட் கோஹ்லி தன்னகத்தே வைத்துள்ளார்.
கடந்த 11ஆம் ஆண்டு ஆகத்து 31ஆம் திகதி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
அப்போட்டியில் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தின்போது 8வது ஓவரை விராட் கோஹ்லி (Virat Kohli) வீசினார்.
அந்த பந்தை எதிர்கொண்ட கெவின் பீட்டர்சன், கிரீஸை விட்டு வெளியே வர அது அகல பந்தாக சென்றதால், விக்கெட் கீப்பர் தோனி விரைவாக ஸ்டம்பிங் செய்தார்.
அகல பந்தில் (wide) ஸ்டம்பிங் செய்தால் விதிகளின்படி அவுட்தான். மேலும், பந்துவீச்சாளரின் ஓவரில் பந்தாக கணக்கிடப்படாது. என்றாலும் பீட்டர்சனின் விக்கெட் கோஹ்லியின் கணக்கில் சேர்ந்தது.
இதன்மூலம் 0 பந்தில் 1 விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற அரிய உலக சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
டி20 சர்வதேச கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே கோஹ்லி விக்கெட் எடுத்தார். அதுவும் wide பந்தில் விக்கெட் எடுத்ததும் தனிச்சிறப்பாகும்.
பகுதிநேர பந்துவீச்சாளராக சில நேரங்களில் செயல்படும் கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளையும், டி20யில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire