நயன்தாராவின் படங்கள் வெற்றி பெறுமா?
2 மாசி 2026 திங்கள் 13:08 | பார்வைகள் : 2469
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு வர உள்ளது. வரிசையாக தோல்விப்படம் கொடுத்து வரும் நயன்தாரா இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக அவர் நடித்த 'மன சங்கர வரபிரசாத் காரு' பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஜனவரியில் வெளியான இந்த படம் 350 கோடி வசூலை பெற்றுள்ளது.
அடுத்து 'கேஜிஎப்' யஷ் உடன் நயன்தாரா நடித்த 'டாக்சிக்' மார்ச் மாதம் 19ம் தேதி ரிலீஸ். இந்த படமும் பெரிய அளவில் வசூலிக்கும், அடுத்து வரும் 'மூக்குத்தி அம்மன் 2'வும் வெற்றி படமாக அமையும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் நயன்தாரா. இந்த படங்கள் வெளியான பின் நயன்தாரா நடித்து வரும் 'மண்ணாங்கட்டி, ராக்காயி' உள்ளிட்ட படங்களும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. 40 வயதை கடந்து விட்ட அனுஷ்கா, திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடித்த 5க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire