Paristamil Navigation Paristamil advert login

டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

3 மாசி 2026 செவ்வாய் 05:17 | பார்வைகள் : 2587


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு  140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிபர் டிரம்ப்,  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரி 18 சதவீதம் ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக  பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இன்று எனது  அன்பு நண்பர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி  இனி 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி. இந்த  அற்புதமான அறிவிப்புக்காக  அதிபர் டிரம்ப்பிற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும்   உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்றும்போது, அது மக்களுக்கு பயன் அளிப்பதுடன் இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிடும்.

உலக அமைதி, ஸ்திரத்தன்மை  மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது. டிரம்ப்பின் அமைதி முயற்சிகளுக்கு  இந்தியா ஆதரவு அளிக்கும். நமது உறவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்