இலங்கையில் ATM பயனர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல் !
3 மாசி 2026 செவ்வாய் 16:24 | பார்வைகள் : 2627
பணத் தேவைக்காக தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரங்களை (ATM) பயன்படுத்தும் பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் ATM இயந்திரங்களை பயன்படுத்தும்போது முன்பின் தெரியாதவர்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கிகளுக்கு அருகில் நின்றுகொண்டு ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளை திருடி வந்த ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 11 வங்கி அட்டைகளையும் கைப்பற்றினர்.
இச்சந்தேக நபர் பொலன்னறுவையைச் சேர்ந்த 42 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடமை நிமித்தம் அரச வங்கியொன்றுக்குச் சென்றபோது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார்,இச்சந்தேக நபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பாக பல நீதிமன்றங்களில் ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையிலுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire