அஜித்தின் AK 64 படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறதா?
4 மாசி 2026 புதன் 11:56 | பார்வைகள் : 2632
‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் மீண்டும் நடிக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித், பிப்ரவரி மாதம் முதல் தனது 64வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வந்ததோடு, இந்த படத்தை தயாரிப்பதற்காக பல தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தற்போது அஜித் 64வது படத்தை ‘ஏகே என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சார்பில், தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனில் சுங்கரா தயாரிப்பு நிறுவனம், தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்த ‘போலா சங்கர்’ உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire