தனுஷ் படத்தில் இணைந்த மம்முட்டி..?
4 மாசி 2026 புதன் 11:57 | பார்வைகள் : 2766
அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த திரைப்படமான ‘D55’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். தற்போது இப்படத்தின் மிக முக்கிய அறிவிப்பாக, மலையாள மெகாஸ்டார் மம்முட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் மற்றும் மம்முட்டி இருவரும் ஒரே படத்தில் இணைவது சினிமா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டியின் கதாபாத்திரம் கதையில் மிகவும் வலிமையானதாகவும், திருப்புமுனை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஒரு பக்கம் தனுஷின் நடிப்புத் திறமை, மறுபக்கம் மம்முட்டியின் ஆளுமை என ‘D55’ திரைப்படம் பான்-இந்தியா அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire