Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு - 35 பேர் பலி

 ஜப்பானில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு - 35 பேர் பலி

4 மாசி 2026 புதன் 16:46 | பார்வைகள் : 2826


ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானில் 15 மாகாணங்களில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

வடக்கு ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் 12 பேரும், உவோனுமா நகரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 50 வயதுடைய முதியவர் உள்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதெவேளை ஜப்பானின் சீதோஷ்ண நிலை மோசமாகக் காணப்படும் அதே சூழலில் அங்கு மின்வெட்டும் நிலவுவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் பலரும் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் போவதால் சிரமத்தையும் சந்தித்து வருவதுடன் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பொது போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.