எம்எல்ஏ பதவி கொலைவெறி தாக்குதல் நடத்த கொடுக்கப்பட்ட லைசன்சா? அண்ணாமலை
5 மாசி 2026 வியாழன் 13:46 | பார்வைகள் : 2875
திமுக சட்டசபை எம்எல்ஏ என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டசபை எம்எல்ஏ பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டசபை எம்எல்ஏ கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டசபை எம்எல்ஏ என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டசபை எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire