Paristamil Navigation Paristamil advert login

புட்டின் தயாராக உள்ளார்! - ஜனாதிபதி மக்ரோனுக்கான தகவல்!!

புட்டின் தயாராக உள்ளார்! - ஜனாதிபதி மக்ரோனுக்கான தகவல்!!

5 மாசி 2026 வியாழன் 17:46 | பார்வைகள் : 4783


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடன் உரையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளாக தொடரும் ரஷ்ய- யுக்ரேன் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவர ஐரோப்பா அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஜனாதிபதி மக்ரோன் பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில், மக்ரோனுடன் உரையாக புட்டின் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்  Sergey Lavrov   இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

”"நீங்கள் பேச விரும்பினால், ஏதாவது ஒன்றைப் பற்றி தீவிரமாகப் பேச விரும்பினால், அழைக்கவும். புடின் எப்போதும் தொலைபேசியை எடுப்பார். அவர் அனைத்து திட்டங்களையும் கேட்பார்," என அவர் விபரித்தார்.

இரு வாரங்களுக்கு முன்னர் “நான் புட்டினுக்கு தொலைபேசியில் அழைக்க உள்ளேன்.” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதத்திலேயே இதனை அவர் தெரிவித்தார்.