Paristamil Navigation Paristamil advert login

தவெக சார்பில் இன்று முதல் விருப்ப மனு வினியோகம்|

தவெக சார்பில் இன்று முதல் விருப்ப மனு வினியோகம்|

6 மாசி 2026 வெள்ளி 13:24 | பார்வைகள் : 2378


சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. தற்போது தேர் தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடு வதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெறப்பட இருக்கிறது.இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க.அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற் காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3