வளர்ச்சி அடைந்த பாரதம்! 21-ம் நூற்றாண்டின் 2-ம் காலாண்டு முக்கியம்
6 மாசி 2026 வெள்ளி 14:25 | பார்வைகள் : 2507
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மேலவையில் நடந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது அவர், பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு சூழலை பார்ப்பது அல்லது ஒரு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி யோசிப்பதற்கும் காங்கிரசின் செயல்பாட்டிற்கும் பெரியதொரு வித்தியாசம் உள்ளது என்றார். .வளர்ச்சி அடைந்த டெல்லிக்கான பயணத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவோம்: முதல்-மந்திரி.
நாங்கள், நாட்டின் 140 கோடி குடிமக்களையும், சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்ற வகையில் அணுகுவோம். குடிமக்களையும், அவர்களின் திறன் மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதுவே ஜனநாயகத்தின் உண்மையான வலிமை. ஆனால், காங்கிரசோ குடிமக்களை பிரச்சனையாக கருதுகிறது என கூறினார்.காங்கிரசை கடுமையாக தாக்கி பேசிய அவர் தொடர்ந்து பேசும்போது, 21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு முடிந்து விட்டது.
2-ம் காலாண்டு மிக முக்கியம். கடந்த ஆண்டில் இந்த கால கட்டத்திலேயே சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய கட்டம் அமைந்தது. . அதனை போன்று இந்த நூற்றாண்டின் 2-ம் காலாண்டு முடிவெடுக்க வேண்டிய காலம் என்றார். வளர்ச்சி அடைந்த பாரதத்தின் கட்டமைப்பிற்கான திசையில், இந்த காலகட்டம் சம அளவில் திறன் வாய்ந்தது என பேசினார். இந்த பஸ்சை இந்தியா தவற விடாது. அது முன்னின்று வழிநடத்தி செல்லும் என்றும் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire